வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் வெட்டிக்கொலை ; சென்னையில் நடந்த கொடூரம்!

Photo of author

By Parthipan K

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் வெட்டிக்கொலை ; சென்னையில் நடந்த கொடூரம்!

Parthipan K

ஊரடங்கு காரணமாக பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள பலர் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல இயலாததால் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளனர்.மேலும் சென்னையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.சென்னை குன்றத்தூரில் உள்ளவர் குணசேகர் என்பவர்.இவரது விட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.இந்நிலையில் 4 மாத காலமாக ஊரடங்கு காரணமாக அஜித் வாடகை தராததால் அஜித்திற்கும் வீட்டு உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாடகை தாரர் வீட்டு உரிமையாளர் குணசேகரனை ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்துள்ளார்.இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் வாடகை தாரர் அஜித்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குன்றத்தூரில் வீட்டு உரிமையாளரை வாடகை கேட்டதற்காக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.