ஈரோடு மாவட்டத்தில் அரசு வேணும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் அரசு வேணும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Parthipan K

Updated on:

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் அரசு வேணும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோகுளோபினோ வதித்திட்டம் விரிவாக நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வேன் ஒன்று வந்திருந்தது. பிறகு இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மாலை ஈரோடு நோக்கி அந்த வேன் சென்று கொண்டிருந்தது மாலை 5 மணி அளவில் வாசனூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்மண் திட்டு என்னுமிடத்தில் அந்த வேன்  சென்று கொண்டிருந்தது.

அப்போது சத்தியமங்கலத்தில்லிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது செம்மண்திட்டு  எனும்இடத்தில் காசநோய் ஒழிப்பு வந்த வேனும் சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் அரசு வேனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டது.

மேலும்  அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல்  தெரிவிக்கப்பட்டதன்  மூலம் 108 ஆம்புலன்ஸ் மூலமாக   சக்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அந்த வழியாக வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் ஆசனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.