1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
60
#image_title

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிற்குள் எறும்பு கூட்டங்கள் வந்து விட்டாலே நமக்கு பெரும் தலைவலி தான்.இவை நாம் உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும்.

இந்த எறும்பு கூட்டத்தை ஒழிக்க கடைகளில் பணம் கொடுத்து ரசாயனப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எறும்பு தொல்லைக்கு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

*வினிகர் – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

*முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும்.பின்னர் அதில் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்புகளில் ஏதும் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவு எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.

*அடுத்து வினிகர் 1 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு 3 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

*இதை ஒரு ஸ்பிரேயரில் ஊற்றி நன்கு கலக்கி கொண்டு எறும்பு தொல்லை இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் எறும்பு சில நிமிடங்களில் செத்து மடிந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம் – 4

*பூண்டு – 3 பற்கள்

*இலவங்கம் – 6

செய்முறை:-

1) சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டில் 3 பற்கள் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.

2) மருத்துவ குணம் நிறைந்த மற்றொரு பொருளான இலவங்கத்தை உரித்த பூண்டுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3) பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.அதனோடு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அவற்றை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

4) 15 நிமிடங்கள் கழித்து அந்த வேறு ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

5) அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தில் நான்கு எடுத்து தூள் செய்து கலந்து கொள்ள வேண்டும்.

6) இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கடி எறும்பு கூட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே பண்ண வேண்டும்.இந்த முறையை அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நம்மை பாடாய் படுத்தி வரும் கடி எறும்பு கூட்டங்களை எளிதில் வீட்டை விட்டு வெளியேற்றி விடலாம்.