காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தென்காசி காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் கோரி உறவினர்கள் தாக்கல் செய்த மனுவில் கிருத்திகா பட்டேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் அவரது பெற்றோர் மற்றும் உறுவினர்களால் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் உறவினர்கள் விஷால், கீர்த்தி மற்றும் சண்முகராஜ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு.
வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் கிருத்திகா பட்டேல் ஏப் 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பெண்ணின் அப்பா அம்மா உறவினர் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் அடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
அப்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தொடர்ந்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வருவதால் வழக்கின் தற்போது நிலவரங்கள் என்ன என்பதை கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் கிருத்திகா பட்டியலை நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டி உள்ளதால் ஏப்ரல் 14 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.