நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

0
112

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

 

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது.

 

இந்நிலையில் தற்பொழுது ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

 

ஐதராபாத்தில் உள்ள ஜவகர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாரய்யா(38) என்ற இளைஞர் குடித்துவிட்டு அவ்வழியே சென்றுள்ளார்.மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள ஜவுளிக்கடை ஒன்றிலிருந்து பெண்(28) ஒருவர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அப்பெண்ணை பார்த்த மாரய்யா அவரை பின்தொடர்ந்து பாலியல் சேட்டையில் ஈடுபட முயன்றுள்ளார்.வாலிபரின் செயலை கண்டு அதிர்ந்த அப்பெண் கூச்சலிட்டு தன்னை காத்துக்கொள்ள கோபத்தில் அவரை அடிக்க முயன்றார்.

 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாலிபர் கோபத்தில் அப்பெண்ணின் ஆடைகளை கிழித்தெறிந்து சுமார் 15 நிமிடம் நிர்வாணப்படுத்தி அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.இதனை அவ்வழியாக சென்ற ஒரு பெண் தடுக்க முயற்சி செய்துள்ளார்.ஆனால் அந்த வாலிபர் தடுக்க வந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியுள்ளார்.

 

மேலும் இதில் வேதனையளிக்கும் செயல் என்னவென்றால் பொதுமக்கள் நிறைய பேர் இருந்தும் அப்பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை தடுக்க யாரும் முன்வராததே ஆகும்.

 

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மாரய்யா அவ்விடத்தை விட்டு சென்றார்.இதையடுத்து சிலர்

அங்கிருந்த பிளக்ஸ் பேனர்களை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் முழுவதும் மூடினர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜவகர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரித்தனர்.பிறகு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாரய்யாவை நேற்று கைது செய்தனர்.

 

இந்நிலையில் நடுவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி இளைஞர் ஒருவர் தவறான செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசெந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர்!!
Next articleதென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!