தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

0
35

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் கட்சியை வழிநடத்தி சென்றார். அதன் பிறகு சில தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை எடுத்தாலும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் கட்சியின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வந்தாலும் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

 

இந்நிலையில், கட்சி தொடங்கப்பட்டு 50 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மதுரையில் மாபெரும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

சென்னையிலும், வட தமிழகத்தில் மாநாடு நடத்தாமல் ஏன் தென் தமிழகத்தில் மாநாடு நடத்துகிறார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், தென் தமிழகத்தில் அதிமுகவினருக்கு செல்வாக்கு சற்று குறைவுதான் என்றும் அதனால் தென் தமிழக மக்களை கவரவே மதுரையில் மாநாடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் நடைப்பயணத்தை தொடங்கிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் செயல்பாடும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

இந்த பாத யாத்திரை மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு பலமடங்கு பெருக்கி விடலாம் என்பது அண்ணாமலை அவர்களின் திட்டமாக உள்ளது.

 

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் இதற்கான பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அண்ணாமலை நடைபயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும் கட்சியின் மீது அவநம்பிக்கையே மக்கள் மத்தியில் பெருக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக-வின் மாநாடு, அண்ணாமலை அவர்களின் பாத யாத்திரை, இரண்டுமே அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கூறப்படுகிறது.