தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

Photo of author

By Rupa

தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

Rupa

Updated on:

In the villages around Devadanapatti, mineral resources are looted day and night by tractor! Will the concerned department take action??
தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா  தேவதானபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி ,  நாகம்பட்டி ,நல்ல கருப்பம்பட்டி, ஜெயமங்களம் ஆகிய  கட்டுதல் பணியில் பேஸ் மட்டம், சுவர் எழுப்புதல், பூச்சி வேலை, கான்கிரீட் வேலை ஆகிய வேலைகளுக்கு மணல் தேவைப்படுகிறது. பெரும்பாலான கிரஷர்களில் இருந்து டஸ்ட் மணல் என்னும் மணல் வாங்கி வீட்டு வேலை செய்வார்கள். ஆனால் இப்பகுதிகள் அப்படி யாரும் க்ரசரில் மணல் வாங்கி வீடு கட்டுவது இல்லை.

தேவதானப்பட்டி அருகே உள்ள முக்கிய கிராமமான எருமலை நாயக்கன்பட்டியில் அதிக அளவில் டிராக்டர் வைத்திருக்கும் நபர்கள் சில (சமூக விரோதி)  ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் எருமலை நாயக்கன்பட்டி அருகே சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் முறையான அரசு அனுமதி பெறாமல் கனிம வளங்களை கொள்ளையடித்து   இரவு பகல் பார்க்காமல் தோட்டம், குறுகிய மலை, ஓடைகளில் கனிம வளங்களை (மணல்) சுரண்டி வீடு கட்டுபவர்களுக்கு ஒரு டிராக்டர் மூன்று ஆயிரம் முதல் நான்காயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கனிம வளங்கள் மிகவும் குறைந்து வருகிறது.  ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்கள் செய்யும் எருமலை நாயக்கன்பட்டி டிராக்டர் உரிமையாளர்களை கைது செய்யுமா சம்பந்தப்பட்ட துறை என்று கேள்வி எழுந்துள்ளது. கனிம வளங்களை திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கும் டிராக்டர் உரிமையாளர்களை பிடித்து டிராக்டர் உரிமம் ரத்து செய்யவும் டிராக்டர் உரிமையாளர்கள் மீது தகுந்த  நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை எழுப்பி உள்ளனர்.