தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

0
264
#image_title

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கு பூட்டி சீல் வைப்பு.

தேனி நகரில் இயங்கி வந்த மஹாராஜா தொடக்க பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயிண்று வந்த நிலையில் இந்த பள்ளியின் தாளாளரான அன்பழகன் தேனியில் செயல்பட்டு வந்த மற்றோரு அரசு உதவி பெறும் பள்ளியான முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தும் வந்துள்ளார்.

இது தொடர்பான புகார் கல்வி துறை அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் இது தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த புகாருக்கு காரணம் தனது பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சென்றாய பெருமாள் தான் காரணம் என எண்ணி அவரை கடுமையாக தாக்கியும், மாணவர்களை உள்ளே வைத்து பள்ளியை பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் சென்றாய பெருமாள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தாக்குதல் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இங்கு பயின்று வந்த மாணவர்களின் நலன் கருதி அவர்களை அருகில் உள்ள பள்ளிக்கும், இங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை வேறு பள்ளிக்கும் இடமாற்றம் செய்யபட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்ட நிலையில், இது குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கபட்டது.

இந்த நிலையில் இந்த பள்ளி சுற்றுப்புறம் சுகாதாரமின்றி செயல்பட்டதும், அரசு அங்கிகாரம் இல்லாத மணையில் பள்ளி செயல்பட்டு வந்ததும், இங்கு படிக்கும் மாணவர்களின் நலன் முற்றிலுமாக பாதிக்கபடும் வகையில் பள்ளியின் செயல்பாடுகள் இருந்து வந்ததாலும், பள்ளியின் தாளாளர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டும், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உடலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நிலையில் உடனடியாக பள்ளியை பூட்டி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளிக்கு பூட்டி சீல் வைத்தனர்.

இந்த பள்ளியினை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleபொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!
Next articleசேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!