இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Parthipan K

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Parthipan K

in-this-area-164-people-were-arrested-in-one-year-shocking-information-released-by-the-police

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (39). இவரை  வெட்டி கொலை செய்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(44) , திருப்பதி பாண்டியன் மகன் முத்து செல்வம்(24), பழைய காயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா(26) முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபு ராஜா(20) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கற்பகவள்ளி(27). என்பவரை கொலை செய்த வழக்கில் கற்பகவள்ளியின் கணவர் வேல்முருகன்(35), ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியை சேர்ந்த பண்டாரம் மகன் பிரேம்குமார்(21) ஆகிய இரண்டு பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் ஆறு பேரையும் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலைகள் மாவட்ட போலீஸ் சுப்ரீம் பாலாஜி சரவணனின்  பரிந்துரையின்படி இவர்களின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கேசவரன் , முத்து செல்வன், சிவபெருமாள் என்ற சிவா, முத்துராஜா, வேல்முருகன் என்ற  ஆறு பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாளையங்கோட்டை ஜெயில் வழங்கினார். இதுவரை கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட 10 பேர் போதை பொருட்கள் வழக்கில்  167 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது ஆகியுள்ளனர் என்பது  தெரிய வருகிறது.