பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு

0
86

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார்.

ஷமி டி 20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது. பிசிசிஐ தேர்வாளர்கள் அவரை 50-ஓவர் வடிவத்திலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர் இனிமேல் டி 20 போட்டிகளில் ஒரு வீரராக கருதமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

“ஷமி இன்னும் இளம் வீரர் இல்லை, டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் எங்களுக்குத் தேவை. அதனால் அவர் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவருடன் பணிச்சுமை மேலாண்மை குறித்து உரையாடினோம். இனி இப்படித்தான் இருக்கப் போகிறது. இப்போதைக்கு, அவர் டி20க்கான திட்டங்களில் இல்லை, மேலும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படும், ”என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இப்போது ஷமி மீண்டும் இந்திய அணியில் ஷமி தேர்வாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பூம்ரா காயம் காரணமாக அடுத்த சில மாதங்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் ஆசியக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்தியா விளையாடியுள்ள சில டி 20 தொடர்களில் அவர் அணியில் இணைக்கப்பட்டு விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.