நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

0
204

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

 

ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷம் தான். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

 

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.

அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.அதேபோல், ஞான கடவுளான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும், குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம் ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பு :சித்ரா பௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்.வைகாசி பௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.

ஆனி பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.ஆடி பௌர்ணமி – அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள்.ஆவணி பௌர்ணமி – அம்பியை வழிபட உகந்த நாள்.புரட்டாசி பௌர்ணமி – உமாமகேசுவரர் பூஜைக்கு உகந்த நாள்.ஐப்பசி பௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.மார்கழி பௌர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள்.தை பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.மாசி பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.பங்குனி பௌர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து பூஜை செய்து, தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும்.

 

 

Previous articleஇந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!
Next articleKanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!