தரமான பாலுக்கு ஊக்கத்தொகை!! ஆவினின் புதிய அறிவிப்பு!!
பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது.
மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பச்சை ,நீலம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட கவர்களில் பேக் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறு விற்பனை தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசானது சமீபத்தில் நைஸ் என்ற பெயரில் நீல நிறம் பாக்கெட்டை விற்பனை செய்து வந்தது.
இவ்வாறு விற்கப்படும் ஆவின் பாலின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. சாமானிய மக்கள் தான் இந்த விலை உயர்வால் மிகவும் பாதிக்கபடுகின்றனர்.
இந்த விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசும் மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் இந்த பால் விலை உயர்ந்ததற்கு காரணம் என்னவென்றால் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்துவர்தற்கு பதிலாக பாலின் தரத்தை பொறுத்து 1 ரூபாய் என்ற வீதம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவார்கள் என்று நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவால் பால் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.அந்த வகையில் இனி கொழுப்பு சத்து மற்றும் இதர சத்து நிறைந்த பாலின் தரத்திற்கு ஏற்ப இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.