ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!!

0
38
Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!
Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!!

நாட்டில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காணப்பட்டாலும், பெரும்பாலன மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர்.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள முன்பதிவின் போது ரயில் நிலையத்தின் ஊர் பெயர்களை எளிதாக கண்டறிய புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களிடம் டிஜிட்டல் வசதிகள் அதிகமானதால் தற்போது ரயில் டிக்கெட்டை முன்பாகவே பதிவு செய்து கொள்கின்றனர். அதற்கு ஏராளமானோர் இந்த ஐ ஆர் சி டி சி இணையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, தற்போது ரயில் நிலையங்களின் ஊர் பெயர்களை கண்டறிவதற்கு மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 175 நகரங்களில் உள்ள 725  நிலையங்களை கண்டறிய முடியும்.

உதாரணத்திற்கு சென்னை என்று தேடினால் அதில், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களை காட்டும். இதைப்போலவே முக்கிய நகரின் பெயரை நாம் தேடும்போது அதில் உள்ள மற்ற ரயில் நிலையங்களின் பெயரையும் இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இதனால் பயணிகள் மிகவும் பயனடைவார்கள். ஏதேனும் ஒரு சமயத்தில் ரயில் வருவதற்கு தாமதமாகி விட்டால், மாற்று ரயில்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் இதன் மூலமாக சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.இதனை இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் பயணிகள் காணலாம்.

author avatar
CineDesk