குடிபோதையில் தகராறு ! பறிபோன நண்பனின் உயிர்!

Photo of author

By Kowsalya

சென்னையில் இரு நண்பர்கள் வீட்டில் தனியே மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு ஏற்பட்டு தன் நண்பனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த பஷீர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சைமன் எனும் நண்பர் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று இருவரும் திருப்பூர் குமரன் தெருவில் உள்ள பஷீரின் மாமனார் வீட்டில் மது அருந்தி இருக்கின்றனர். இருவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பஷுர் தனது உயிர் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

என்ன செய்வது என்று போதையில் தெரியாத அவர் சைமனை அங்கேயே விட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார் . அதன் பிறகு வீடு திரும்பிய பஷீரின் மாமனார் ரத்த வெள்ளத்தில் சைமன் கிடப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சியுற்று உடனே காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர் சைமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் பஷீரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குடிபோதையில் உயிர் நண்பனை கத்தியால் குத்திய சம்பவம் மிகவும் அப்பகுதியில் சோகத்தையும் மற்றும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.