ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இவற்றை சாப்பிடுங்கள் போதும்!

Photo of author

By Parthipan K

ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இவற்றை சாப்பிடுங்கள் போதும்!

Parthipan K

Updated on:

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்..!

ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இவற்றை சாப்பிடுங்கள் போதும்!

இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனை உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான்.நாம் சாப்பிடும் உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றன.

நம் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை தருவதில்லை. ரத்த உற்பத்திக்காக நாம் அயன் போலிக் மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை மூலம் கிடைக்கும் ஆரோக்கியமே மிகவும் சிறந்ததாகும்.

முருங்கைக் கீரையை மூன்று கைப்பிடி அளவு எடுத்து ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உறங்கும் முன்பாக அதில் ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல் செய்து 40 நாட்கள் சாப்பிட்டு வர புதிய ரத்தங்கள் உடலில் உற்பத்தி ஆகிறது.புதினா கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உலர் திராட்சை அல்லது பச்சை திராட்சை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மை அடையும்.

ரத்த உற்பத்திக்கு மிகவும் சிறந்த பழம்அத்திப்பழம். இந்தப் பழமானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இது சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பவர்களை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.