இனி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை கூட்டத் தொடரில் முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 13 அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.இவை அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.
அந்த வகயில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு விபத்து மற்றும் நிவாரண தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் மாற்றுத்திறனாளி நல வாரிய என்ற அமைப்பின் மூலம் மட்டும் சுமார் 52 நலத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நல வாரியத்தில் மட்டும் சுமார் 10.11 லட்சம் பேர் தன்னை உறுப்பினராக பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இது மட்டுமாலாமல் அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது இந்த உதவித்தொகையை அரசு இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளதால் அதற்காக மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம்,உடல் செயலிழந்து உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மருத்துவ செலவுக்கு வழங்கப்பட்ட வந்த 20 ஆயிரம் ரூபாய் தற்பொழுது 50 ஆயிரம் ரூபாய்யாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.