தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது.
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தனர். இதற்கான மட்டும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் இரண்டு கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது.
இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626 மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.
இன்னும் சில பாடப்பிரிவுகள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றை நிரப்புவதற்காக நேரடி மாணவர் சேர்க்கையும் துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு வருகின்ற ஜூலை 1 ம் தேதி துவங்கப்பட உள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளும் தொடங்கப்பட உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2 வருடங்களாக காலதாமதமாக திறக்கப்பட்ட வகுப்புகள் இந்த வருடம் தான் ஜூலை முதல் வாரத்திலேயே துவங்கப்படுகின்றது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற திங்கக்கிழமை முதல் வகுப்புகள் துவங்கப்பட இருப்பதால் கல்லூரி மாணவர்களின் வருகையால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.