குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0
72
DMK officials attacked the child development program officer!! Police action!!
DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31.

விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார்.

இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகமானது குழந்தைகள் குறைவாக இருக்கின்ற அங்கன்வாடி மையங்களை கணக்கெடுத்து அதன் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்துடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் புள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தை அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்துடன் இணைப்பதற்காக முத்துராமலட்சுமி பரிந்துரை செய்துள்ளார்.

இந்த முடிவிற்கு திமுக நிர்வாகிகள் எதிர்ப்பை தெரவித்துள்ளனர். எனவே திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக பணிபுரியும் முத்துக்குமார் உடனடியாக நகராட்சி அலுவலகம் வந்து தன்னை சந்திக்கும்படி கூறி உள்ளார்.

ஆனால் முத்துராமலட்சுமி அங்கு செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருக்கின்ற குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகத்துக்கு முத்துகுமார் மற்றும் திமுக நகர துணைச் செயலாளர் ஆகியோர் வந்தனர்.

இவர்கள், புள்ளசெல்லிபளையத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சுப்பிரமணி என்பவர். இவருக்கு வயது 40. மற்றும் கரட்டுப்பளையத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பவர். இவருக்கு வயது 41 உட்பட ஒரு பத்து பேர் கொண்ட அடியாட்களுடன் வந்து முத்துராமலட்சுமியை தாக்கியுள்ளனர்.

அப்பொழுது அருகே இருந்த முத்துராமலட்சுமி-யின் மாமனாரையும் தாக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் திமுக தெற்கு மாவட்ட செயலாளரான முத்துக்குமார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

author avatar
CineDesk