நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

Photo of author

By Parthipan K

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

Parthipan K

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் அந்த பகுதியில் வினாடிக்கு 1.80  லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளதால் இந்த வாரம் முதலில் இருந்தே அங்கு அருவிகளில் பரிசல்கள் இயக்கவும் ,சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று ஆறாவது நாளாக அருவிகளில் பரிசல்கள் இயக்கவும் ,சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை தொடர்கின்றது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.