பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

0
66

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

அண்மையில் ரொட்டி சப்பாத்தி மற்றும் நான் வகைகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும்
விதிக்கப்பட்டிருந்தது.இந்த வரி உயர்வு குறித்து பல தரப்பினரும்,ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் ஆதார்டிங் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தை குறித்து,குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன் மற்றும் மலிந்த் தோரவானே,அடங்கிய குழு பரோட்டாவின் மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி சரியானது தான் என்று விளக்கம் அளித்துள்ளது.

அதாவது பரோட்டாவும் சப்பாத்தியும் வெவ்வேறானது என்றும்,சப்பாத்தி நான் ரொட்டி இவற்றையும் பரோட்டாவையும் ஒரே ரகத்தில் சேர்க்க முடியாது என்று கூறியது.மேலும் ரெடி டு ஈட் உணவுகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும்,கடைகளில் வாங்கி சமைக்கப்படும் அல்லது சூடு படுத்தப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் சப்பாத்தி நான் ரொட்டி ஆகியவற்றை கடைகளில் வாங்கியவுடன் அப்படியே சாப்பிட முடியும்.ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டா மற்றும் பரோட்டா வகைகள் குறைந்தபட்ச நிமிடங்களாவது சமைத்து தான் சாப்பிட முடியும் அதனால் தான் பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி வரி எனவும் விளக்கம் அளித்துள்ளது.

author avatar
Pavithra