சென்னையில் நாளுக்கு நாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையின் முக்கிய மண்டலங்களிலும் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
குறிப்பாக சென்னையின் முக்கிய நகரமான அண்ணா நகரில் இன்றுடன் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது அங்கு வசிப்பவர்களுக்கு அச்சமளித்தது.
மேலும் சென்னையின் தூங்கா நகரான கோடம்பாக்கத்தில் 1559 பேரும் , திரு.வி.க நகரில் 1325 பேரும் , அதிகபட்சமாக வடசென்னையின் முக்கிய நகரான ராயபுரத்தில் 2252 பேரும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதிகரித்துக் கொண்டே போகும் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கையால் சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வர பயப்படுகின்றனர். ஊரடங்கு முடிவடையும் நிலையிலும் மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று மக்களால் பேசப்படுகிறது.
வந்தவர்களுக்கு வாழ்க்கையளித்த சென்னை இன்று கொரானாவிற்கும் வாழ்க்கையளித்து சென்னைவாசிகளுக்கு துயரம் அளிக்கிறதே என பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்
மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தினாலும், வெளிநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் அதிகம் உள்ள காரணத்தினாலும் மட்டுமே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பலரும் கூறுகின்றனர்.