அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

0
102

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  அதன் உருமாற்று வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணத்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.81 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.48 கோடியை தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 220 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 7,585 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மெல்ல மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

Previous articleகொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!
Next articleதமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!