கூட்டணி அமைக்க உள்ள இந்தியா-ஜப்பான்! சீனாவை புறக்கணிக்க உலக நாடுகள் செய்த மாஸ்டர் பிளான்!

Photo of author

By Parthipan K

ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் ஜப்பானில் சந்திக்க இருக்கின்றனர். இந்த சந்திப்பில் 5ஜி மற்றும் 5G பிளஸ் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஜப்பானின் புதிய பிரதமராக யோசி ஹைட்  சுகா அண்மையில் பதவி ஏற்றார். பிரதமர் நரேந்திர மோடி இவருடன் தொலைபேசியில் பேசியபோது இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு உறவை உலக அரங்கில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு  எடுத்துள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உதவியுடன் 5ஜி தொழில்நுட்ப  மேம்பாட்டு களுக்கான பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகின்றன.அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சீனாவுடனான உறவு  விரிசலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி மேம்பாட்டில் சீனா முன்னணியில் இருந்து வருவதும் நாம் அறிந்ததே. ஆனால் 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவையும் சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் சீன ராணுவத்தால் இந்தியா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளுமே திக்குமுக்காடிப் போயிருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவின் லடாக் அருகே சீனா எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜப்பானிலும் சென்ட் காகு தீவுகளில் சீனா பிரச்சனை செய்து வருகிறது.

இதனால் 5ஜி தொழில்நுட்ப மேம்பாட்டில் சீனாவை ஒதுக்கும் வகையில் இந்தியாவும் ஜப்பானும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.