பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

0
263

பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் முன்னணி பந்துவீச்சாளர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அந்த அணியின் இளம் வீரர் முகமது வாசீம் கான் காயத்தால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

வலைப்பயிற்சியில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அசுரபார்மில் இருக்கும் அவர் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் “ஷாஹீனின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கும்.

ஆசியக்கோப்பையில் அவர் இருக்க மாட்டார் என்பது வருத்தமாக இருக்கிறது.” என்று அவர் டிவீட் செய்திருந்தார். இப்போது மற்றொரு வீரரும் காயத்தால் பாகிஸ்தான் பவுலிங் அட்டாக் மேலும் பலவீனமடைந்துள்ளது.

அதே போல இந்திய அணியிலும் வேகபந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயத்தால் விளையாடவில்லை. அதே போல மற்றொரு டி 20 ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹர்ஷல் படேலும் காய்ம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரை இழந்துள்ளார். நாளை மறுநாள் நடக்கும் பரபரப்பான போட்டியை இந்த வீரர்கள் இல்லாததால் இரு அணிகளுமே பின்னடைவை சந்தித்துள்ளன.

Previous articleஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்!
Next articleலைகாவுக்கு 21 கோடி ரூபாய் கடன்… சொத்துகளை தாக்கல் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here