‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்!

0
227

‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்!

அமெரிக்க நடிகரும் குத்துச் சண்டை வீரருமான தி ராக் இந்தியா பாகிஸ்தான் போட்டி சம்மந்தமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

கடந்த முறைப் போலவே இந்த முறையும் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக அமெரிக்க ஹாலிவுட் நடிகரும், குத்துச்சண்டை வீரருமான டுவைன் ஜான்சன்( தி ராக்) விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் “ பெரிய போட்டியாளர்கள் மோதும்போது உலகமே அசையாமல் இருக்கும். இது சாதாரண போட்டி அல்ல. அதற்கும் மேல்… இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான நேரம்” எனக் கூறியுள்ளார்.

Previous articleநீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு!
Next article”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here