நேற்று வரை கொட்டித் தீர்த்த மழை… இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்காவிட்டால் பல கோடி நஷ்டம்!

0
130

நேற்று வரை கொட்டித் தீர்த்த மழை… இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்காவிட்டால் பல கோடி நஷ்டம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்க உள்ளது.

உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டி நாளை நடக்க உள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளும் மோது போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி நடக்கும் அன்று மைதானம் இருக்கும் பகுதியில் சுமார் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி நடக்க உள்ள மெல்போர்னில் நேற்று வரை மழை பெய்துள்ளது. இதனால் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்தை விட ஒளிபரப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும். இந்த போட்டிக்கான விளம்பரக் கட்டணங்கள் மற்ற போட்டிகளை விட அதிகம். அப்படி போட்டி நடக்காவிட்டால் விளம்பரம் மூலம் வரும் வருவாய் அனைத்தும் ஒளிபரப்பாளர்களுக்கு நஷ்டமாக அமையும்.

மேலும் லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இல்லை என்பதால் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

Previous article1000 ஊழியர்களை திடீரென்று பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் காரணம் என்ன?
Next articleஇவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை… இந்த இரு அணிகள்தான் பைனலி- சேவாக் கணிப்பு!