டேவிட் மில்லர் அபார பேட்டிங்… மோசமான பீல்டிங்கால் போராடி தோற்ற இந்தியா…!

0
156

டேவிட் மில்லர் அபார பேட்டிங்… மோசமான பீல்டிங்கால் போராடி தோற்ற இந்தியா…!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் இணைந்த டேவிட் மில்லர் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் நிதானித்து விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

டேவிட் மில்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணியின் லிங்கி இங்கிடி 4 விக்கெட்களை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இடையில் இந்திய அணியின் மூத்த வீரரான கோலி தவறவிட்ட ஒரு கேட்ச்சும், ரோஹித் ஷர்மா தவறவிட்ட ஒரு ரன் அவுட்டும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் தோல்விக்கும் ஒரு காரணமாக அமைந்தது. இப்போது புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது.

Previous articleதமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!
Next articleதமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு!