கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா நோய் தொற்று பரவல் பிரிட்டனில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று பிரிட்டன் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்போது பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பிறகு பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே பிரிட்டனில் இருந்து இந்தியா வருகின்ற விமானங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்களின் சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.