இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

0
214

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டி 20 போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் சமநிலையில் உள்ளது.

முதல் போட்டி

மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 208 ரன்கள் சேர்த்தது. ஆனால் மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக அந்த இலக்கை தாரைவார்த்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீதும் பவுலிங் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இரண்டாவது போட்டி

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாக்பூரில் தொடங்க இருந்த போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டன. இதில் ஆஸி முதலில் பேட் செய்து 90 ரன்கள் சேர்க்க, பின்னர் ஆடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 8.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.

மூன்றாவது போட்டி

வாழ்வா சாவா இறுதிப் போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 20 டி 20 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. இந்த போட்டியை வெல்லும் பட்சத்தில் 21 வெற்றிகளைப் பதிவு செய்து இதுவரை எந்தவொரு அணியும் படைக்காத சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்!
Next articleபரபரப்பு செய்தி:! விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!!