என்ன ஒருநாள் போட்டி போல விளையாடுறாங்க?… வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

0
250

என்ன ஒருநாள் போட்டி போல விளையாடுறாங்க… வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினார்கள். கடைசி கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக விளையாடி சதமடித்தார். இதையடுத்து 122 ரன்கள் முன்னிலையோடு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க விக்கெட்களை சீக்கிரம் இழந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.

அதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா இங்கிலாந்து பவுலர்களின் வேகத்தில் வீழந்தது . மொத்தம் 257 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 378 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதனால் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். நான்காம் நாள் ஆட்டமுடிவில் 259 ரன்களை 4.54 என்ற ரன் ரேட்டில் சேர்த்துள்ளனர். களத்தில் ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் உள்ளனர். ஐந்தாம் நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 119 ரன்களே தேவை என்பதால் இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

Previous articleகுடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!
Next articleஇந்தியில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!