இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

0
172

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

டி20 உலக கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இரண்டுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. இந்த இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தான் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிகிறது. இதில், இன்று தோல்வியடையும் அணி அரையிறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இதில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த மைதானத்தில் பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழகத்திற்கு ரெட் அலர்ட் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!
Next article14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை-அரசு அதிரடி அறிவிப்பு.!!