தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!

0
246

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் அதன் காரணமாக, நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல, தென்காசி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?
Next articleஇன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here