தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா?
இந்தியா இன்று தென் ஆப்பிரிக்க அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதையடுத்து அந்த வெற்றிக்களிப்போடு இன்று தென் ஆப்ப்ரிக்காவை எதிர்கொள்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக இரு அணிகளும் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இன்று மாலை 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இன்று விளையாட உள்ள இந்திய உத்தேச அணி பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
அணி
ரோகித் சர்மா (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்ஸர் பட்டேல், சஹல் தீபக் சகர், பும்ரா, அர்ஷதீப் சிங்.
ரிஷப் பண்ட்டுக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதுபோல தீபக் சஹார் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.