மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..!
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் என்பதையே நாம் மறந்துவிட வேண்டியது தான் என பிரபல பொருளாதார வல்லுநரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான். மோடியும் அவரின் அமைச்சரவையும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் வரைபடத்தையே மாற்றி விடுவார்கள். உங்களால் பழைய இந்தியாவை அடையாளம் காண முடியாது.
அதுமட்டுமல்ல மோடியின் ஆட்சி மீண்டும் அமைந்தால் மணிப்பூரில் குக்கி, மெய்தே இனத்தவர்களுக்கு இடையே நடந்து வரும் இன மோதலால் அங்கு நிலவும் அமைதியின்மை நாடு முழுவதும் நிலவும். அந்த அளவிற்கு மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்துவார்” என மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.