இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா!

0
184

இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா!

டி 20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி உலகக்கோப்பை தொடர் தயாராகி வருகிறது. இதற்காக தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஆடும் லெவன் அணியே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் ஒரு குழப்பமாக 6 ஆவது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பதுதான். இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை அணியில் எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவருக்குதான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

பவுலிங்கைப் பொறுத்தவரை ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் இவர்களோடு அக்ஸர் படேல் ஆகிய நான்கு பவுலர்கள் இடம்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான ப்ளேயிங் லெவன் வீரர்கள் யார் என்பதை இப்போதே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் வீரர்களிடம் கடைசி நேரத்தில் தகவல்களை தெரிவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.

Previous articleஅவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
Next articleபரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்! முக்கிய அறிக்கைகளை தாக்கல் செய்ய திட்டம்!