அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

0
75

வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவதது தமிழகத்தில் இந்து தர்மம் தொடர்பாக பேசுவதும் ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத் தோற்றம் இருக்கிறது இந்த மாயத் தோற்றம் நிச்சயமாக நீக்கப்பட வேண்டும் கன்னியாகுமரியில் நம்முடைய பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதே பலமற்ற இடங்களிலும் வர வேண்டும் ஆன்மீகம்தான் நம்முடைய அடிப்படை ஆனால் காபியின் பலம் கருப்பினால் மறைந்து விடக்கூடாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் மேலும் ஒரு ஆளுநர் இப்படி பேசலாமா என்று கேள்வி எழலாம். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள் என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருவர் இருக்கிறார் அவர் ரம்ஜான் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள்? அந்த பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டியது தானே என்று கேட்டேன்.

ஆனால் பக்கத்து வீட்டு அண்ணனுக்கு அது தெரியாமல் போயிட்டு ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டுமே அவமதிக்கப்படும்போது எழுச்சி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது எங்கும் ஹிந்தியை திணிக்கவில்லை. பாராளுமன்ற நிலை குழுவினர் சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி ஹிந்தி மொழியை கொண்டு வர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.