இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் மீண்டும் இந்திய வெற்றி பெற்றுள்ளது.
பீரங்கி ,கவச வாகனங்கள் போன்றவற்றை தாக்கும் நாக் ஏவுகணை இறுதி பரிசோதனை இன்று நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த ஏவுகணை மூலம் எதிரிகளின் டேங்குகள் மற்றும் பிற வாகனங்களை அளிக்கும் வல்லமை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.
நிலத்திலிருந்தும், வான்பரப்பிருந்தும் இந்த ஏவுகணை ஏவுவது ஒரு தனி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4 முதல் 7 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று தாக்கும் வல்லமையும், துல்லியமான தொழில்நுட்ப செயல்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
நாக் ஏவுகணை மூன்றாம் தலைமுறை பீரங்கி வாகனம் எதிர்ப்பு ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது . இந்த ஏவுகணை மூலம் பகல் இரவு என அனைத்து நேரத்திலும் எதிரிகளின் கவச வாகனங்கள் மீது ஏவ முடியும்.
ராணுவத்தில் தற்போதுவரை இரண்டாம் தலைமுறை மிலான் 2d மற்றும் கொங்கூர் பீரங்கி வாகனத்தை அழிக்கும் ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. இந்திய ராணுவத்திற்கு 300 ஏவுகணை மற்றும் இருபத்தைந்து ஏவுகணை கொரியர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2018 -ஆம் ஆண்டு அனுமதி வழங்கி இந்தியாவை தற்சார்பு நாடாக ஆக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடியின் ஒரு நடவடிக்கையில் அமைந்துள்ளது.
மேலும் பிரதமர் மோடியும் , பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்களும், இந்தியாவின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்த டிஆர்டிஓ மேற்கொண்ட இந்த முயற்சிக்கு ராணுவத்தின் சார்பாக பாராட்டி வருகின்றனர்.