இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவுவதாக தெரிவித்தார். இதே போன்று இந்தியாவிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதகவும் அவர் கூறினார்.
தற்போது 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவ கூறிய லாவ் அகர்வால், வார சராசரி ஒருநாள் பாதிப்பு 29 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும், தொற்று பாதிப்பு விகிதம் 2.6% என்றும் தெரிவித்தார். கடந்த 29ஆம் தேதி 0.79% ஆக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம், எட்டாவது நாளான நேற்று 5.03% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த எட்டு நாட்களில் 6.3 மடங்காக அதிகரித்துள்ளது.
India witnesses sharp surge in #COVID19 cases #COVID Case positivity has increased from 0.79% to 5.03%
6.3 times increase noticed in last 8 days
– @MoHFW_INDIA pic.twitter.com/Bu8w4zyLCw
— PIB India (@PIB_India) January 5, 2022
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் ஜார்க்கண்ட் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் தொற்று பரவல் சராசரியாக உயர்ந்து வருகிறது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என லாவ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.