தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஆளுநர் உரை! மருத்துவர் ராமதாஸ்!

0
70

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அதோடு ஆளுநர் உரையில் எந்த விதமான மக்கள் நலத் திட்டங்களும் இடம்பெறவில்லை, திமுகவின் புகழ்பாடும் சரியாகவே இருக்கிறது என்று அதிமுக கடுமையாக விமர்சனம் செய்தது.

அதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்களும் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை, தமிழ்நாட்டை பாதிக்கும் முக்கிய சிக்கல்களில் கூட தெளிவான செயல் திட்டங்கள் இடம்பெறாத கவர்னர் ஊரை ஏமாற்றம் வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக அரசை பாராட்டும் வாசகங்கள் மட்டும்தான் கவர்னர் உரை முழுவதும் நிறைந்திருக்கின்றன. பொதுமக்களுக்கு பயன் தரும் அறிவிப்புகளை தேடினாலும் கிடைக்கவில்லை, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கும், அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை கவர்னரின் வார்த்தைகளால் அறிவிக்க செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாதது ஏமாற்றம் வழங்குகிறது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை மாதாந்திர மின் கட்டணம் வசூல், உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆளுநர் உரையில் எந்த விதமான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.