தமிழக டிஜிபிக்கு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

0
83

தேசிய சின்னங்கள்,அரசு முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை, தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வருகின்ற அல்லது வைக்கப்பட்டிருக்கின்ற முத்திரைகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அந்த அறிவிப்பை பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும், மத்திய, மாநில, அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவது குறித்த தகவல்களை பெறுவதற்கு விதி மீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், காவல்துறை அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், இதுகுறித்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வருகின்ற 21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.