முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

Photo of author

By Jayachithra

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதன் பின் 165 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மிக அபாரமான பந்து வீச்சு ஆகும். புவனேஷ் குமார் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக 55 ரன்கள் எடுத்தார். மேலும்,இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் சமமான ஃபார்மில் இருந்தது.

இந்த காரணத்தால் இலங்கையை வென்று முதல் போட்டியில் வெற்றியை பெற்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.