நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Photo of author

By Vinoth

நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை தன் வசமாக்கியது. அதையடுத்து நடந்த மூன்றாவது டி 20 போட்டியிலும் இந்தியா வென்றது.

இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டி 20 போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளன. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடந்த நான்காவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்து 191 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது டி 20 தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.