இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது
டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 48 ரன்கள் மற்றும் அணி கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களும் எடுத்தனர்.
மேலும், இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என எண்ணி களம் இறங்கிய இங்கிலாந்து அணி மிக சிறப்பாக ஆடியது.
இருந்த போதிலும், டி20 தொடர் ஆட்டத்தின் இறுதியில் இந்திய வீராங்கனைகளின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது. மேலும், அந்த அணி 8 விக்கெட் இழப்பிறகு 140 ரன்கள் மட்டும் சேர்த்தது. அதன் காரணமாகா 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்து உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.