இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

Photo of author

By Vinoth

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தவிர வேறு எந்தவிதமான டி 20 லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை.

வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பணமழைக் கொட்டும் டி 20 கிரிக்கெட் லீக் தொடராக  ஐபிஎல் உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை.

 வெளிநாட்டு வீரர்கள் கிட்டத்தட்ட அனைவரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்குபெற்று விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் எந்த வெளிநாட்டு தொடரிலும் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. பிசிசிஐ இது சம்மந்தமாக கறாரான விதிமுறைகளை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களையும் இதுபோல வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் இப்போது பேசியுள்ளனர். அதில் “வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை பெறுகின்றனர். அதுபோல இந்திய வீரர்களுக்கும் இதுபோன்ற தொடர்களில் விளையாடுவதால் நல்ல அனுபவம் கிடைக்கும்” எனக் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் முன்னாள் வீரர்களான ஸ்டீபன் பிளமிங், அனில் கும்ப்ளே மற்றும் டாம் மூடி ஆகியோர் கலந்துகொண்ட விவாதம் ஒன்றில் இந்த கருத்தை மூன்று பேருமே வலியுறுத்தி பேசினர்.