இந்திய பிரதமர்-தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம்!நடந்தது என்ன ?

0
130

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி  தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

செப்டம்பர் 23ஆம் தேதி காலை கன்னியாகுமரி மாவட்டத்திலும் மாலை விருதுநகர் மாவட்டத்திலும் முதல்வரால் ஆய்வுமேற்கொள்வதாக கூறப்பட்ட நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் குறித்த தகவல் வெளி வந்தபின் முதல்வரின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி “தமிழக மருத்துவ கட்டமைப்பை கட்டமைப்பை வலுப்படுத்தும் ரூபாய் 3000 கோடி நிதி தொகுப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும்.தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஆயிரம் கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

Previous articleஇந்தியா ரஃபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானி தேர்வு !!
Next articleகால்நடை மருத்துவப் படிப்புகள்; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.! கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு!