சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!

Photo of author

By Sakthi

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச விருப்பம் தெரிவித்தது. இந்திய அணியின் சார்பாக களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி வந்த வேகத்தில் நடையைக் கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பக்கபலமாக இருந்த ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஹர்டிக் பாண்டியா 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அதனை தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் மிக நிதானமாக ஆடி 48 பந்துகளில் 68 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்கள் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் ஜேசன் ராய் பவுண்டரிகளை அடித்து நொறுக்கி விட்டார். ஆகவே அவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் தான் உடைய ஆட்டத்தை இழந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் வெற்றி பெற்றது இதன் மூலமாக 5 போட்டிகள் உடைய இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ​அடுத்த போட்டியானது வரும் 14ஆம் தேதி அதாவது நாளைய தினம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது