கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

0
131

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் அந்தந்த கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் முக்கிய தலைவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான தொகுதிகளிலும் தாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளிலும் களம் காண இருக்கிறார்கள்.அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். அதேபோல தமிழகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அதேபோல அதனைத் தொடர்ந்து வந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

இவ்வாறு அவர் கடந்த 10 ஆண்டுகளாகவே கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மிகப்பெரிய அசுர பலம் வாய்ந்த ஒரு அதிமுகவின் மையமாக விளங்கி வருகின்றார். இதற்கிடையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் வேலுமணி அவர்களை தாண்டி திமுகவால் நெருங்க முடியவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் அவருக்கு எதிரான பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்கட்சியான திமுக வைத்து வருகின்றது. அந்த விதத்தில் சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு விசிட் அடித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதேபோல திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார்கள்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் அவரிடம் கேள்வி கேட்ட ஒரு பெண்ணை அவர் அமைச்சர் எஸ் பி வேலுமணி அனுப்பி தான் இங்கே வந்திருக்கிறார் அதனால் அவருக்கு நான் பதில் சொல்ல முடியாது என்பது போல மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணி கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தெரிவிக்காத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் அந்தப் பெண்ணை அடித்து அங்கிருந்து விரட்டி விட்டார்கள் என்று சொல்லப்பட்டது.


இந்த நிலையில், அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பாக திமுக மீது வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படி தொடர்ந்து தொகுதியை வசப்படுத்துவதற்கு திமுக முயற்சி செய்து வருகிறது ஆனால் அதிமுக அந்த தொகுதியில் மட்டுமல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கி வருகிறது. அதனை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ஆனாலும் திமுகவின் கடும் முயற்சி இன்று வரையில் பலித்த பாடு இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. என்னதான் குட்டிக்கரணம் போட்டு அதிமுகவை கோயம்புத்தூர் பகுதியில் வீழ்த்தி விடலாம் என நினைத்தாலும் கூட அந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிமுகவின் செல்வாக்கை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.