பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு!
கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவர்கள் எழுதவுள்ளனர்.இதில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுத்துறை தற்போது தேர்வு மையங்கள் கண்டறிதல்,பெயர்ப் பட்டியல்,தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை செய்து வருகின்றது.இதனைதொடர்ந்து பொது தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை பற்றி தேர்வுத்துறை வரும் ஜனவரி 30 ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெறவுள்ளது.
அந்த கூடத்தில் வினாத்தாள் ,விடைத்தாள் மாவட்ட அலுவலகங்களில் இருந்து கட்டுக்காப்பு மையங்களுக்கு இடமாற்றம்,தேர்வு மையங்கள் ,அறை கண்காணிப்பாளர் உள்பட தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல்,செய்முறைத் தேர்வு வினாத்தாள் மையங்களில் காவல் பாதுகாப்பு பணி பற்றி பல்வேறு வழிகாட்டுதல்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.