உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது என பீட்டா போன்ற அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை எதிர்த்து சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது அந்த போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15,16,17ஆகிய தேதிகளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த 16 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.அதில் 877 காளைகளும்,345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள்.
மேலும் வீர்கள் அனைவரையும் குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் ஒன்பது சுற்று நடத்தப்பட்டது.ஒவ்வொரு சுற்றுக்கு இரண்டு மணி நேரம் கொடுக்கப்பட்டது.மாலை ஐந்து மணிக்கு போட்டி நிறைவு பெற்றது.அப்போது காவல் ஆய்வாளர்,செய்திக்காளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 12 பேர்,காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர்,பார்வையாளர்கள் 9 பேர் என பலரும் பலத்த காயம் அடைந்தனர்.
அப்போது ஒன்பது காளைகளை அடக்கிய பாலமேடு வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்தராஜனை காளை குத்தி வீசியது.அப்போது அவர் மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனால் பாலமேடு ஜல்லிக்கட்டு கலையிழந்தது.மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.