5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்…மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !

Photo of author

By Savitha

அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது பணத்திற்கு பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. தற்போது மூத்த குடிமக்களின் நலனுக்காக அஞ்சலகம் வழங்கும் SCSS சிறந்த வருமானத்தை தருகிறது. அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்கள் மட்டுமல்லாது குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.Frequently Asked Questions about Senior Citizens Savings Scheme (SCSS) | SA  POST

SCSS எனப்படும் அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.4 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் கிட்டத்தட்ட 5 வருட காலங்களுக்கு முதலீடு செய்வதன் மூலமாக உங்களுக்கு திட்டத்தின் முதிர்ச்சியை ரூ.14 லட்சம் வரையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கப்பெறும். ஓய்வு பெற்றவர்களுக்கு அஞ்சல் அலுவலகத்தின் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.What is Senior Citizen Saving Scheme (SCSS) | IDFC FIRST Bank

SCSS திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்பும் நபர்களுக்கு 60 வயது இருக்க வேண்டும், இதில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். இது தவிர விஆர்எஸ் கொடுத்தவர்களும் இந்த திட்டத்தில் பங்களிக்க தொடங்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம் மற்றும் கணக்கில் நீங்கள் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. இத்திட்டத்தின் முதிர்ச்சி காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இருப்பினும் முதலீட்டாளரின் விருப்பத்திற்கேற்ப இந்த காலத்தை நீட்டித்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு 5 ஆண்டு முதிர்விற்கு பிறகு மொத்தமாக ரூ.14, 28,964 கிடைக்கும், இதில் உங்களுக்கு வட்டியாக ரூ. 4,28,964 கிடைக்கும்.